*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 8, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 2

சந்தோஷ் முதுகலைப்பட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறான்,ஆர்த்தியின் ஊரிலிருந்து பேருந்து நல்ல முறையில் வேகமாகச் சென்றால் ஐந்தரை மணிநேரத்தில் சென்றுவிடலாம்.சந்தோஷ் குடும்பத்திற்கு அன்பான,பொறுப்பான,அழகான,அலட்டல் இல்லாத வாலிபமான  மகன்.படிப்பிலும் சிறந்தவன்,குடும்ப சகிதமாக விடுமுறைக்கு மாமா வீட்டுற்கு போவாள் ஆர்த்தி,சொந்தங்களின் சுப நிகழ்ச்சியிலும் சந்தோஷை சந்திதுள்ளாள்,ஆர்த்தியுடன் சந்தோஷ் சகஜமாக பேசுவது கிடையாது,ஆர்த்தி இதை பொருட்படுத்தியதுமில்லை.மாமா என்று கூப்பிட்டதுமில்லை.சொல்வதாக  இருந்தால் ஆர்த்தி அத்த கூப்பிடுறாங்க பாரு என்பான் சந்தோஷ், ம்...இதோ போறேன் என்பாள்.அவ்வளவுதான் இவர்க்ளுக்கிடையேயான பந்தம் இருந்தது.ஆர்த்தி ஏன் கோவிலுக்கு இந்த வழியில போற,உங்க ஊர்னு நினைச்சுட்டியா,எல்லாம் மோசமானவன்க,நீ மெயின் ரோடு வழியாகவே போ என்பான், ஆர்த்தியிடமிருந்து சரி,சரி என்று மட்டுமே பதில் வந்தது.மனதுக்குள் மட்டும் சந்தோஷ் மாமானு கூப்பிட்டுக்கொள்ளும் ஆர்த்தி,ஏன் சந்தோஷ் மாமாவிற்கு நம்ம மேல இப்படியொரு அக்கறை . எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நான் ஏன் சந்தோஷ் மாமாவிடம் மட்டும் சகஜமாகப் பழக மறுக்கிறேன்.நேருக்கு நேர் மாமானு கூப்பிடக் கூட மனம் வரமாட்டிங்குதேனு தனக்குத் தானே பல கேள்விகளும்,யோசனைகளுமாய் முதல் முறை யோசித்துக் கொண்டே கோவிலுக்கு போனாள்.

 வெட,வெடவென வளர்ந்த்து,கண்ணைக் கவரும் ஓவியம் போன்ற ஆர்த்தி சந்தோஷ் வசிக்கும் தெருவினில் அந்த வீட்ட்ற்கும்,இந்த வீட்டிற்கும் போகும்போதெல்லாம் சந்தோஷ் வீட்டிற்கு அருகிலுள்ள மற்ற சில சொந்தங்களும் அக்கம் பக்கத்திலும்,ஆர்த்தி மாமன பாக்க வந்தியா  என்றும்,சந்தோசு பொண்ண நல்லா பாத்துக்கடா என்று கேலி செய்யும்போது ,  சே இதான் இந்த கிராமத்து பக்கமே வரக்கூடாதுனு கடுப்பில் மனதுக்குள்ளே புலம்பிக்கொள்வாள் ஆர்த்தி.
ஆர்த்தியைவிட 4  வயது பெரியவனான சந்தோஷ் எதிலும் யோசித்து பக்குவமாக செயல்படும் சந்தோஷ் அந்த கேலிகளை மறுத்ததில்லை, முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிடுவான்.இதுதான் ஆர்த்தியை மேலும் யோசிக்க வைத்தது.தன் அத்தை வீட்டில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த ஆர்த்தியிடம் தோட்டத்தின் வழியாக வந்த எதிர் வீட்டு அக்கா என்ன ஆர்த்தி பாத்திரம்லாம் விளக்கிட்டுருக்கியா,அத்த எங்கனு குரல் கொடுத்த சாந்தி அக்காவை,வாங்கக்கா என்று கைகளை கழுவிவிட்டு வரவேர்த்த ஆர்த்தி,அம்மாவும் அத்தயும் கடைக்கு போயிருக்காங்கக்கா,நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம்ல,அதான் கொஞம் சாமான்லாம் வாங்க வேண்டிருக்கு.அப்பாவும் ....ம்னு இலுகையிட்டவள் சந்தோஷ் பெயரை சொல்ல ஏனோ மனம் வரவில்லை இதோ ஹாலில்தான் டீவீ பாத்திட்டுருக்காங்க போல,நாலடி வைத்தவுடன் தென்பட்ட அந்த சின்ன ஹாலில் ஆர்த்தியின் அப்பாவும் சந்தோஷும் கிரிக்கெட் மேச் பார்த்துக்கொண்டிருந்தனர்.


வாசல் பகுதியிலிருந்து  சந்தோஷின் அப்பாவும் உள்நுழைந்தார். எதிர்பட்ட சாந்தியை வாம்மா சாந்தி உக்காரு என்றவரிடம்,பரவாயில்லண்ணே சந்தோசம்மாவ பாத்துட்டு போகலாம்னு வந்தேன்,கடைக்கு போயிருக்காங்க போலயிருக்கு,நான் அப்றமா வறேனென்றவள் மருமக நல்லா வேளையிலாம் பாக்கிறா போலருக்கே,என்ன சந்தோசு இப்பவே ஆர்த்திக்கு ட்ரெய்னிங்கா என்று சாந்தி அக்கா கேட்டதும் சந்தோஷ் சின்ன புன்னகையுடன் ஆர்த்தியை ஒரு வினாடி பார்த்துவிட்டு மீண்டும் கிரிக்கெட்டைப் பார்த்தான்.இத்தனை நாள் சந்தோஷை பார்த்த போது தோணாத எதோ ஒரு உணர்வு சந்தோஷின் அந்த ஒரு வினாடி பார்வையாலும்,புன்னகையாலும் பிறந்தது.பல பேர் பல முறை கேலி செய்த போதெல்லாம் தோண்றாத இந்த உணர்வு இன்று சாந்தி அக்கா மூலம் பிறந்தாகிவிட்டது.
வந்த வழியே திரும்பிச் சென்ற சாந்தி அக்காவுடன் தோட்டம் வரை சென்றவளுக்கு போயிட்டு வறேம்மானு சாந்தி சொல்லிட்டு போவதுகூட காதில் விழவில்லை. 

சந்தோஷின் அந்த புன்னகையும்,பார்வையும் ஸ்லைட் ஷோவாக ஆர்த்தியின் மனதில் போய்க்கொண்டிருந்தது.சந்தோஷ் மாமவின் அந்த புன்னகைக்கு காரண்மென்ன ? சந்தோஷ் மாமா தன்னை விரும்புகிறாரோ,இவர்களெல்லாம் சொல்வது போல மாமா என்னை கட்டிக்க விரும்புகிறாரோ என்று யூகித்தவளுக்கு இனம் புரியாத உணர்வு பிறந்தது.புதிதாக இந்த உலகத்தில்
பிறந்துள்ளது போல நினைக்க ஆரம்பித்தாள்.
இதுவரை சாதரணமாக தன் மாமனை பார்த்தவள்,புதிதாய் பிறந்த நிமிடத்திற்கு பிறகு சந்தோஷைப் பார்த்தாலே பரவசம் ஆகத்தொடங்கினாள்,தான் ஏன் இப்படி உணருகிறோம்னு தனக்குத் தானே கேட்டாலும் அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. வராத வெக்கமெல்லாம் வருவதாக உணர்ந்தாள்.சந்தோஷ் என்ற பெயரை  சொல்லி,சந்தோஷ் மாமா என்று மனதிற்குள் கூப்பிட்டும் பூரித்துக்கொண்டாள்.எப்படா ஊருக்கு போவோம்னு நினைத்தவளுக்கு இப்போது சந்தோஷ் வீட்டிலிருந்து புறப்பட  மனம் வரவில்லை.தான் என்ன உணருகிறாள்,இதை யாரிடம் எப்படி சொல்வது,சரிதானா?இப்படி பல குழப்பங்களுடன் சற்று பித்துப் பிடித்தவள் போலாகிவிட்டாள்.


இரவு உணவு முடிந்தது. மறுநாள் காலை ஊருக்கு போவதற்கு ஆர்த்தியின் அம்மா பேகிங் செய்துகொண்டிருந்தாள்.ஆர்த்தி....  தோட்டத்தில் கொடியில் எதாவது துணிகள் விட்டுடோமானு பாத்திட்டு வாமா என்றாள் ஆர்த்தியின் அம்மா.போங்கம்மா நீங்களே போய் பாருங்க என்ற ஆர்த்தி சந்தோஷ் தோட்டத்தை நோக்கிப் போவதைப் பார்த்தவுடன்,சரிம்மா இதோ போய் பார்த்திட்டு வறேனு கிளம்பினாள்.தோட்டத்திற்கு போனவள்  கொடியில் எந்த துணிகளும் இல்லை,வந்த சந்தோஷ் மாமாவையும் காணுமே என்று கண்களை சுழல விட்டவள் யாரோ இடதுபுற சுவற்றில் சாய்ந்து நிற்பதைக் கண்டு பக்கென பயந்த மாத்திரத்தில் அது சந்தோஷ் மாமாதான் என்பதை உணர்ந்தவுடன் இனம் புரியாத சந்தோஷத்தில் அவள் இதயம் துடிப்பது அவள் காதுக்கே கேட்டது.அசால்ட்டாக சுவற்றில் சாய்ந்து கொண்டு இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறார் என்று ஆர்த்தி யோசித்து முடிப்பதற்குள் என்ன ஆர்த்தி ஊருக்கு கிளம்பிட்டியா என்று தொய்வான குரலில் கேட்டான் சந்தோஷ்,இதைக் கேட்ட ஆர்த்திக்கு தான் நிற்கும் பூமி சுழல்கிறதா,தான் சுற்றுகிறோமா என்று தெரியாதளவுக்கு சின்ன மயக்கமே வந்தது போல இருந்தது.பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை,தனது மிரட்சியான கண்களை இமைத்து அடைத்துவிட்ட தொண்டைக்குழியிலிருந்து ம்....என்று பதில் சொன்னாள்.தன்னைப் போலவே சந்தோஷ் மாமாவும் உணர்ந்ததால்தான் இப்படியொரு கேள்வி கேக்கிறார் என்று மனதில் அசைபோட்டு முடிப்பதற்குள்,சரி பன்னிரெண்டாவது படிப்பு ரொம்ப முக்கியம்,நல்லபடியா படி என்றான்.

அதற்கும் ம்..என்றாள் ஆர்த்தி.தனது பட்டாசு பேச்சு,மத்தாப்பு சிரிப்பெல்லாம் ஓடி ஒளிந்துகொண்டதையும்,தினமும் பார்த்த சந்தோஷ் மாமா இப்போ ஏன் புது ரூபமாகத் தெரிகிறார் என்பதற்கும் ஆர்த்திக்கு விடை தெரியவில்லை.அதற்குள் இன்னும் அங்க என்ன பன்ற...என  அம்மா குரல் கேட்டவுடன் மிக வேகமாக அம்மாவிடம் போனவள் எந்த பதிலும் சொல்லாமல் எதோ சிந்தித்துக் கொண்டிருந்தவளை என்னம்மா அங்க எதும் துணிங்ல்லாம் இல்லேல என்ற அம்மாவிற்கும் பதில் சொல்லாமல் நின்றவளை ஆர்த்தி,ஆர்த்தி என்னாச்சு உனக்கு என்று அம்மா குரல் கொடுத்தவுடன்தான் இல்லம்மா.அங்கெல்லாம் ஒன்னுமில்ல என்றாள் ஆர்த்தி.


சரி நான் எல்லாம் எடுத்து வச்சுடேன் நீ படுத்து தூங்கு,நான் சித்த நேரம் அத்த மாமாட்ட பேசிட்டு வறேன்,காலையில ஆறு மணி பஸ்சுக்கு போனாதான் சாய்ங்காலத்திற்குள் வீட்டுக்கு போய் சேரலாம்னு சொல்லிட்டு நகர்ந்தாள் ஆர்த்தியின் அம்மா.ஆர்த்திக்கோ தலை வெடிக்காத குறைதான்,நாம ஏன் இப்படி ஃபீல் பன்றோம்,சந்தோஷ் மாமா ஏன் அங்க போய் நின்னுட்டுருந்தாரு,அவர் கேட்ட கேள்விகளை வீட்டிலே கேட்டிருக்க வேண்டியதுதான,நம்மள தனியா பாத்து பேசதான் அங்க போய் நின்னுட்டுருந்தாரோ,இன்னும் சித்த நேரம் நின்னுருந்தால் வேறன்ன கேள்வி கேட்டிருப்பார்,வேறென்ன பேசிருப்பார்னு பல கேள்விகள்,இதே மன ஓட்டத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை,படுப்பதும்,எந்திரிப்பதுமாக இருந்தாள்.

சில நிமிடங்களில் நான் சந்தோஷ் மாமாவை விரும்புகிறேன்,சந்தோஷ் மாமாவும் தன்னை விரும்புகிறாரா அல்லது எதார்த்தமாகதான் நடந்து கொள்கிறாரா? என்று தன் மனக்கோட்டை கதவை அடைத்து கண்ணசர போகும் நொடியில் “யே சந்தோசு..அங்க என்ன செய்ற, காலையில ஊருக்கு கிளம்புறாங்க,நீ ஏழரை மணிவர தூங்குவ,எழுப்பினா கோபம் வரும்,  இங்க வாப்பா அத்த மாமாட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு போய் படுத்து தூங்குப்பா”என்று சந்தோஷின் அம்மா குரல் கேட்டவுடன் தன்னறியாமல் வந்த தூக்கமும் பரிபோனது,இன்னமும் சந்தோஷ் தோட்டத்தில்தான் இருகிறான் என்றும் புரிந்து கொண்டாள்  ஆர்த்தி.ஆனால் அந்த இடத்தை விட்டு நகரவோ,சந்தோஷ் மாமா எந்த வழியில் போகிறான்,அங்கு யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவோ ஆர்த்திக்கு தைரியமில்லை.சற்று நேரத்தில் என்ன ஆர்த்தி இப்டி செவுத்துல சான்ஜு தூங்கிட்ருக்கனு ஆர்த்தியின் தோல்பட்டையை உலுக்கிய அம்மாவை மிரள,மிரள பாத்து படுத்து தூங்கினாள் ஆர்த்தி.


பொழுது விடிந்தது,பரபரப்பாக புறப்பட்டார்கள்,பதட்டத்துடன் இருந்த ஆர்த்திக்கு சந்தோஷ் மாமா கண்ணில் படவேயில்லை,பன்னண்டாவது போற நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி அப்பா அம்மாவுக்கு பெருமை சேக்கனும்னு அறிவுரையும்,ஆசிர்வாதமும் கொடுத்தார்கள் சந்தோஷின் பெற்றோர்.அதெல்லாம் என் பொண்ணு நல்ல மார்க் வாங்கிடுவா மச்சான் என்றார் ஆர்த்தியின் அப்பா.  வீடு, தோட்டமெல்லாம் போய் பார்த்தாள் ஆர்த்தி,சந்தோஷைக் காணவில்லை,சந்தோஷ் மாமா எங்கனு கேட்டு தெரிந்து கொள்ளவும் தைரியமில்ல.இப்போ ஊருக்கு போனால் இனி அடுத்த விடுமுறைக்குதான் வரமுடியும்.கடைசியாக சந்தோஷ் மாமவை பார்க்காமல் போறோமேனு   மனதை இங்கே விட்டு உடல்கூடாக  படி இறங்கி பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டாள் ஆர்த்தி பெற்றோருடன்.பஸ்சேத்திவிட கூடவே சந்தோஷின் அப்பாவும் வந்தார்.காலங்காத்தால எழுந்திரிக்கவே மாட்டான் இந்த சந்தோஷு இன்னைக்கு என்னமோ ஃபிரண்டு வீட்டுக்குப் போய் எதோ புக்கு தரனும்னு அவசரமா எழுந்து கிளம்பி போய்ட்டான் என்று  பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் சொல்லிக் கொண்டே வந்தார்  சந்தோஷின் அப்பா.


இதைக் கேட்ட ஆர்த்தி மனதளவில் தளர்ந்தே போனாள்,நாம ஊருக்கு போறோம்னு கொஞ்சம் கூட வருத்தமில்லாம,இனி எப்ப பாக்க போறோன்ற நினைப்பில்லாம சந்தோஷ் மாமா இப்படி எங்கயோ போய்விட்டாரே,  ப்ஸ் ..நாந்தான் தவறா மனதில் ஆசைய வளத்துகிட்டேன் போல,இல்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்கு,இல்ல என் மனசுக்குள்ள வந்த சந்தோஷ் மாமா வந்தவர்தான்,அவர் என்னோட சந்தோஷ் மாமா,எனக்கு மட்டும்தான் சொந்தம்னு பெற்றோரின் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள் ஆர்த்தி.பஸ்டாண்டு வந்துட்டு மணி ஐந்து அம்பத்தியைந்து ஆகிட்டு ஐந்து நிமிடத்தில் பஸ் வந்திடும்.ஆர்த்திக்கு மனது மட்டுமல்ல தன் உடலே பாரமாகிப்போனது.பஸ் வந்தால் கூட தன்னை யாராவது தூக்கித்தான் உக்கார வைக்கனும்போல உணர்ந்தாள்.குனிந்த தலை நிமிராமல் நின்ற ஆர்த்தி,  ஆர்த்தி ....என்று யாராவது இணக்கமாக அழைத்தால் ஓ  வென்று அழுதுவிடும் மன நிலையில் நிற்கிறாள்.தன்னுடன் நிற்பவற்கள் தனக்குரிய பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்க,ஆர்த்தியின் அப்பா ,அங்க பாருங்க மச்சான்,சந்தோஷ்  அங்க நின்னு யார்கிட்ட பேசிட்டுருக்கான் என்றதும்,உயிர் உதித்து எழுந்தவளாய் ஆர்த்தி அங்குமிங்கும் கண்களை சுழற்றி சந்தோஷைத் தேட தனக்கு எதிர் பஸ் நிருத்தத்தில்தான் சக வயதுள்ளவனுடன் பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷ்,பூரிப்பில் ஆர்த்தி முழுமையாக சந்தோஷத்தை உணர்வதற்குள்,பார்ப்பதற்குள் ஆர்த்தி செல்ல வேண்டிய பஸ் வந்தாகிவிட்டது,ஆர்த்தியை முன் தள்ளி பேகெல்லாம் எடுத்துகிட்டியா ஏறு,ஏறுனு பார்வையை திசை திருப்பி ஏறவைத்தாள் அம்மா. பஸ்சுக்குள் நுழைந்த ஆர்த்தி அவசரமாக எதிர் பக்க ஜன்னல் பகுதிக்கு போய் சந்தோஷைத் தேடி உற்றுப் பார்த்தவளை நின்ற இடத்திலேயே சந்தோஷ் சரியாகக் கண்டுபிடித்து நேசமுடன் போய்ட்டுவா ஆர்த்தி என்று சொல்லும் வண்ணம் புன்னகையுடன் தலை அசைத்து,பாத்துக்கலாம் போய்ட்டுவா என்றவண்ணம் கண்ஜாடை காட்ட பஸ்சும் நகர்ந்தது.


வரிசையான ஆயிரம் மலர்கள் ஒரே நொடியில்  மலருவதைக் காணும் பாக்கியம் கிடைத்தால் நம் முகத்தில் எத்தனை மலர்ச்சி ஏற்படுமோ அத்தனை மலர்ச்சி ஆர்த்தியின் முகத்தில்.நான் உன்னை விரும்புகிறேன்னு  சந்தோஷ் மாமா ஆயிரம் முறை  சொல்லிவிட்டதாக பூரிப்படைந்தாள் ஆர்த்தி.ஆனந்தத்தில் வரும் கண்ணீரை பெற்றோருக்குத் தெரியாமல் துடைக்கும் முற்சியில் இருந்தவளை,ஆர்த்தி அங்கையே எவ்ளோ நேரம் நிப்ப,இங்க வா,அப்பா பக்கத்தில வந்து உக்காருன்னு ஆர்த்தியின் அம்மா கூப்பிடதும்தான் சுயநினைவுக்கு வந்தவளாய்,வறேம்மானு பெற்றோர் பகத்தில் அமர்ந்தாள்.இப்போதும் அவளின் குழப்பம் அதிகமானது,சந்தோஷ் மாமா நம்மள வழியனுப்பதான் ஃபிரண்டுகிட்ட புக்குத்தரனும்னு பொய் சொல்லிட்டு பஸ்டாண்டுக்கு வந்தாரோ,ஏன் வீட்லையே நம்மளை வழியனுப்பியிருக்கலாமே,ஒருவேள ஊரைவிட்டு போற கடைசி நிமிடத்துலேயும் நம்ள பாக்கனும்னு நினைச்சாரோ,போய்ட்டு வா,பாத்துக்கலாம் போனு புன்னகைத்து,தலையாட்டி,கண்ஜாடை காட்டினாரே அதெல்லாம் எதார்த்தமானதா,அல்லது நிஜமாகவே நம்மை விரும்புவதனாலா?சந்தோஷ் மாமா நின்ற தோரணையை பார்த்தால்,நமக்கு முன்னே வந்து காத்துக் கொண்டிருந்தது போலவே இருந்ததே ,அப்படியெனில் ஏன் நம் அருகே வராமல் எதிர்பக்கமே நின்று கொண்டிருந்தார்,இப்படி பல கேள்விகள் அவளுக்கு  சில நிமிடத்திற்கு முன் பெற்ற மெல்லிய காதல் உணர்வை,பூரிப்பு மிக்க சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் துளைத்தன.அப்படியே தன் அப்பா மடியில் படுத்து வெதும்பினாள்.தன் மகளின் மனம் படும்பாட்டை அறியாத அப்பா ஆர்த்தியின் தலயை வருட ஆர்த்திக்கு கண்ணீர்  அமைதியான நீரோடையாய் வந்து கொண்டிருந்தது.


தனது பதினொராம் வகுப்பு விடுமுறையில் கடைசி ஒரு வாரத்தை தனது அம்மாவின் அண்ணன் (சந்தோஷின் அப்பா)வீட்டில்  கழிக்க பெற்றோருடன்  வந்த ஆர்த்தி சந்தோஷின் மீதான காதலையும் சுமந்து, சந்தோஷ் தன்னை விரும்புகிறானா என்பதை எப்படி,எப்போது உறுதி செய்துகொள்ளப் போகிறேனென்ற கேள்வியுடன் சொந்த ஊருக்கு சென்றாள் .


மறுநாள் பன்னிரெண்டாவது வகுப்பு துவங்க உள்ளது,ஆர்த்தி தன்க்குத் தானே  உறுதிமொழி எடுத்துக் கொண்டாள்,என்னவெனில் மென்பொருள் இன்ஜினேயர் ஆவதுதான்,தனது எதிர்கால குறிக்கோள்,மார்கைப் பொறுத்து கிடைக்கும்  எந்தத்  துறையானாலும்  இன்ஜினேயரிங்  படிப்பதுதான் தனது மற்றும் பெற்றோரின் விருப்பமும்.எப்போதும் முதல் மதிப்பெண் பெறும் ஆர்த்தி  சந்தோஷ் மாமா நினைவில் அவ்வப்போது  நிலைகுலைந்தாலும் படிப்பில் கவனத்தை சிதறவிடாமல் முதல் மதிப்பெண்களே பெற்று வந்தாள்.


பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட இந்த தருணத்தில் ஆர்த்தியின் மனதில் பல குழப்பங்கள்.இந்த ஒரு வருட காலத்தில் சந்தோஷும் ஆர்த்தியும் சந்திக்க எந்த சந்தர்ப்பமும் அமையவில்லை,அதற்கான முயற்சிகளும் இருவரும் எடுத்துக் கொள்ளவில்லை.இடையில் தூது செல்லக் கூட ஒன்றும் அம்புடவில்லை.இந்த விடுமுறையில் மேல்படிப்பிற்கான தேடல்,நுழைவுத் தேர்வு என்று ஏகப்பட்டது இருப்பதால் அப்பா நிச்சயம் சந்தோஷ் மாமா வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டு போக மாட்டார்,சந்தோஷ் மாமாதான் தன் வாழ்க்கைத் துணைவன் என்ற ஆசை,நம்பிக்கயைத் தவிர,சந்தோஷ் தன்னை விரும்புகிறான்,காதலிக்கிறான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.ஆனால் சந்தோஷ் மாமா வீட்டில் ஒரு வாரம் கழித்த விடுமுறை நாட்களை,கடைசி அந்த இரண்டு நாளில் நடைபெற்ற  சந்தோஷ்க்கும் தனக்கும் உண்டான புரிதல் நிமிடங்களை இந்த ஒருவருடத்தில் கோடி முறை நினைத்து , நினைத்துப் பார்த்து சந்தோசப்பட்டிருப்பாள்.எதோ ஒரு ஏக்கத்திலும் அவ்வப்போது கண்கலங்குவாள்.


இந்த ஒரு வருடத்தில் எந்த கோவிலுக்கு போனாலும்,இனி எப்ப சந்தோஷ் மாமாவை சந்தித்தாலும் கோவில் பிரசாதம் கொடுக்கனும்னு,அங்கிருந்து தனியாக திருநீரு,குங்குமம் எடுத்து வைத்துக்கொள்வாள்,எதாவது நினைக்கும்போது கோவில் மணி அடித்தால் நல்ல சகுணம்,நினைத்தது நடக்கும்னு கேள்விப்பட்டவள் தன் வீட்டின் அருகேயுள்ள கோவிலில் மணி அடிக்கும்  நேரத்தை தெர்ந்து வைத்துக் கொண்டு கோவில் மணி ஓசை கேக்கும்போது சந்தோஷ் மாமா என்னை விரும்ப வேண்டும்,அவர்தான் என் கணவனாகக் கிடைக்க  வேண்டுமென்று சொல்லிக் கொள்வாள்.
தான் பள்ளி கிளம்பும் போது தனது சந்தோஷ் மாமாவும் இப்போ கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருப்பார்,இப்போது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்,இப்போ டீ,வீ பார்த்திட்டுருப்பார்,இப்ப ஃபிரண்ட்ஸுடன் பேசிக்கொண்டிருப்பார்,இந்நேரம் தூங்கியிருப்பார் என்று சந்தோஷ் மாமாவை கனவில் வாழ வைத்துக்கொண்டிருந்தாள்.தன் பெற்றோர் அல்லது வீட்டிற்கு வரும் உறவினர்களோ சந்தோஷ் மாமா குடும்பம் சம்மந்தமாக எதாவது பேசுகிறார்களா என்று கூர்ந்து கவனிப்பாள்,அப்படி எதாவது அவர்களைப் பற்றி பேச்சு நடந்தாள் குஷியாகிவிடுவாளேத் தவிர யாரிடமும் அத்த, மாமா  எப்படி இருக்காங்க,தன் சந்தோஷ் மாமா எப்படி இருக்கார்னு மறந்து போய் கூட விசாரிக்க மாட்டாள் ஆர்த்தி.தன் பாசமிகு பெற்றோரை,கடவுளை நினைக்கிறாளோ இல்லையோ காலை விழித்ததிலிருந்து,இரவு தூங்கும் வரை சந்தோஷுடன் தனது  மறுபக்க உலகில் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஆர்த்தி.


அப்பாவிடம் வாக்களித்தது போலவே சிரத்தையுடன் பொதுத்தேர்வையும் எழுதி 1175 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும் மாவட்டளவிலும் முதல் மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும்,பள்ளிக்கும்  பெருமை தேடித் தந்தாள்.பெற்றோரும்,பள்ளி ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகமும் ஆர்த்தியினால் பெருமை கொள்ள, நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று  தனது மாவட்ட இன்ஜினயரிங் கல்லூரியில் கணினித்துறையில்   ஃபிரி சீட்டும் பெற்றுவிட்டாள்.தொலைக்காட்சி,செய்திதாள் முதலியவற்றில் ஆர்த்தியின் படமும்,பேட்டியும் கண்டு ஆசிரியர்கள்,உற்றார்,உறவினர் எல்லோரும் முதல் மதிப்பெண் பெற்ற சந்தோசத்தைக் கேட்டு வாழ்த்தினாலும்,ஆர்த்தியின் மனது சந்தோஷ் மாமாவின் வார்த்தைக்கும்,வழ்த்திற்கும் ஏங்கியது. 
                                                                                                                             
                                                                                                                                தொடரும்......

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆர்த்தியின் நீண்டதொரு காதல் உணர்வை நன்கு உணர வைத்து விட்டீர்கள்.

ஆர்த்தியின் மனதில் குடிகொண்டுவிட்ட சந்தோஷ் மாமா போலவே, கதையைப்படித்த என் மனதிலும் சந்தோஷம் நிறைந்து விட்டது.

படிப்பில் வெற்றிபெற்றது போலவே ஆர்த்தி தன் காதலிலும் வெற்றி பெற்றாளா? என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்து விட்டது.

ரொம்பவும் அனுபவித்து விலாவரியாக ஒரு பெண்ணின் மனதின் ஆழத்தை, காதல் நெஞ்சத்தை ஒவ்வொரு வரியிலும் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

தொடரட்டும். அன்புடன் vgk

எல் கே said...

ஆச்சி அருமையான நடை. அந்த வயதில் வரும் முதல் காதலுக்கு உரிய தவிப்புகளை அழகா சொல்லி இருக்கீங்க.

(நுழைவு தேர்வு எப்பவோ ரத்து ஆய்டுச்சே ?)

raji said...

நல்ல சுவாரசியத்துடன் கதை செல்கிறது.வாழ்த்துக்கள் ஆச்சி

Unknown said...

தொடர்கிறேன்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்

அம்மாம்,நீண்ட கதைப் பகுதி,அர்த்தியின் காதலை எடுத்துரைக்க வேண்டுமே.வாழ்த்துக்களுக்கும்,பாராட்டிற்கும் நன்றி.

@எல்.கே

தங்கள் கருத்திற்கு நன்றி,மன்னிகவும்,இந்த கதையில் எங்கும் தொலைபேசி கூட வரவில்லை பாருங்கள்,இது பத்து,பதினைந்து வருடத்திற்கு முன்பான கதையாகக் கொண்டு வந்துள்ளேன்.

@ராஜி

//நல்ல சுவாரசியத்துடன் கதை செல்கிறது//

நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கே.ஆர்.பி செந்தில்

அப்படியா?நன்றிங்க.

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமாய் செல்கிறது கதை! தொடரட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமாய் கதை செல்கிறது. பாரட்டுக்கள்.

Angel said...

அருமை .தொடருங்கள்
நானும் வருகிறேன் .

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி

@இராஜராஜேஸ்வரி
நன்றி

@ஏஞ்சலின்
நன்றி